பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் மிகவும் பழமைவாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 15 நாள்களாக காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 60 அடி நீளத்தில் குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டது. விடியவிடிய பூ வளர்க்கப்பட்டு இன்று முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: பெண்களே நுழையாத ஸ்ரீ மல்லிகார்ஜூன கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்!