சென்னை: உலகம் முழுவதும் உள்ள 800 நடனக் கலைஞர்கள் ஜூம் செயலி மூலம் இணைந்து நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைமாமணி மதுரை இரா.முரளிதரனால் கற்றுத் தரப்பட்ட வர்ணத்தை உலக கலைஞர்கள் இணைந்து நடனமாடினர்.
இதன் மூலம் திரட்டப்பட்ட சுமார் ரூ.10 லட்சம் பணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கரோனா நிவாரண நிதியாக அவர்கள் வழங்கினர்.
800 நடனக் கலைஞர்களை ஒரே நேரத்தில் ஒன்றிணைத்து நடனமாடச் செய்தது, மதுரை இரா.முரளிதரனின் மூன்றாவது கின்னஸ் சாதனையாகும்.
இதையும் படிங்க: திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!