சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2020 செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடந்தது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 2020 நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வு தொடர்பான 2-ஆம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
அழைக்கப்படும் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பனி மூடினாலும் பயணம்'- ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை.. அடுத்த 4 ஆண்டுகளில்!