இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2015ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் முறைகேடு செய்து அரசின் உயர் பதவிகளை வகித்து வரும் அறுபதுக்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுவருகிறது. அந்த வழக்கில் இன்று முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்தமுள்ள 75 காலிப்பணியிடங்களில் சென்னையில் உள்ள 2 மையங்களிலிருந்து 60க்கும் அதிகமானவர்கள் தேர்வு பெற்று துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்துவருகின்றனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய நான்கு பேர் ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தொடரும் பின்னணிகள்!