ETV Bharat / state

கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் -  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

author img

By

Published : Dec 16, 2022, 1:10 PM IST

Updated : Dec 16, 2022, 3:52 PM IST

சென்னை: திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ”சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளை பாதுகாக்கப்பட்ட கடலோர பகுதியாக அறிவித்து, 2016ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும். இப்படி பட்ட மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் 42 மீட்டர் உயர பேனாவுடன் கூடிய நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும். மெரினா கடற்கரையில் இனி யாருடைய உடலையும் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது. மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு, மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: எனக்கு கரு நாக்கு, வெளியே நீட்டி காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Last Updated : Dec 16, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.