வெங்காய விளைச்சல் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறைகளின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக ஒரு கிலோ 30 மற்றும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆழ்துளை கிணறுக்குள் தவறி விழுந்த குழந்தை: நிகழ்விடத்தில் முகாமிட்ட அமைச்சர்கள்!