சென்னையில் படிப்படியாக கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை ஐஐடி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஐஐடி கல்லூரியில் மட்டும் படிப்படியாக கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது, அது ஒரு கரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியது. பின்னர் பல்வேறு நடவடிக்கையால் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நட்சத்திர விடுதிகளில் கரோனா
இன்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியான ஐடிசி கிராண்ட் சோழாவில் பணிபுரியும் ஒரு நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அங்கு பணிபுரியும் நபர்களுக்கு பரிசோதித்ததில் படிப்படியாக கரோனோ பாதிப்பு அதிகரித்தது.
மாநகராட்சி மருத்துவ முகாம் அமைத்து அந்த பணிபுரிந்த அனைவருக்கும் பரிசோதனை செய்தது டிசம்பர் 15 முதல் நேற்று (ஜன.02) வரை 609 பரிசோதனை மாதிரிகளை மாநகராட்சி சேகரித்து. அதில் 85 நபர்களுக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிலவரம்: ஒரே நாளில் 867 பேருக்கு கரோனா!