ETV Bharat / state

சென்னையில் தெரு நாய் தொல்லையா? இந்த நம்பருக்கு உடனே கூப்பிடுங்க! - TN Govt

சென்னையில் ஒரே வாரத்தில் 325 தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 325 தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை!

author img

By

Published : Jan 5, 2023, 8:53 AM IST

Updated : Jan 5, 2023, 9:30 AM IST

சென்னை: இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுசுகாதாரத்துறையின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 27ஆம் தேதி வரை இரண்டு வார காலத்தில் 450 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 325 தெருநாய்களுக்கு, நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க அவைகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு, பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எலி மருந்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர் பலி.. பெற்றோர் பைக் வாங்கித் தராததால் விரக்தி!

Last Updated : Jan 5, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.