சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வணிகங்களுக்கு சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919இன் கீழ், பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கேற்றவாறு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்படும் உரிமங்கள், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு, அடுத்து வரும் நிதியாண்டிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும். 2023 - 2024ஆம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை வழக்கமாக பெருநகர சென்னை மாநகராட்சி உரிமம் ஆய்வாளர்கள் மூலம் மண்டல அலுவலகங்களில் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ளவும், தொழில் உரிமங்களை புதுப்பிக்க நடத்தப்பட்டு வரும் முகாம்களிலும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வணிகர்களின் நலன் கருதி தொழில்நுட்ப உதவியுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், கியூஆர் கோடு (QR code) மூலமாகவும் உரிமங்களை தாமாகவே புதுப்பித்துக் கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
-
#ChennaiCorporation#HereToServe#NammaChennaiSingaraChennai pic.twitter.com/LG4bdf8TtB
— Greater Chennai Corporation (@chennaicorp) February 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ChennaiCorporation#HereToServe#NammaChennaiSingaraChennai pic.twitter.com/LG4bdf8TtB
— Greater Chennai Corporation (@chennaicorp) February 7, 2023#ChennaiCorporation#HereToServe#NammaChennaiSingaraChennai pic.twitter.com/LG4bdf8TtB
— Greater Chennai Corporation (@chennaicorp) February 7, 2023
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் தொழில் உரிமங்களை அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் (மார்ச் 31) புதுப்பித்துக் கொள்ளுமாறும், புதிதாகத் தொழில், வணிகம் தொடங்குவோர் உரிமங்களை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ரூ.1,36,000 அபராதம்!