சென்னை வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மூலகொத்தளம் இடுகாட்டில் மயான ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், இவர் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டார்களா? எனச் சந்தேகம் இருப்பதாகக் கூறிய ஜெகனின் சகோதரர், தனது சகோதரர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்
இதையும் படிங்க:பட்டதாரி பலே திருடனிடம் 53 சவரன் தங்க நகை பறிமுதல்!