ETV Bharat / state

'நிச்சயமாக ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவோம்..!' - கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்றிருக்கும் கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப்பேட்டி குறித்துக்காணலாம்.

’நிச்சயமாக ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவோம்..!’ -  கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன்

author img

By

Published : Aug 1, 2022, 9:01 PM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மூன்று அணி ஓபன் பிரிவுகளிலும்; மூன்று அணி மகளிர் பிரிவுகளிலும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா பி அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், சாரின், ரனவுக், அதிபன் பாஸ்கரன் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். இந்த பி அணி தற்போது வரை 4 சுற்று விளையாடி 4 சுற்றுகளிலும் வெற்றி பெற்று இந்திய அணியைப் போட்டி பட்டியலில் முதலிடத்திற்குக்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், இந்தியா பி அணியில் இடம்பெற்று இருக்கும் தமிழ்நாட்டைச்சார்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் போட்டி தொடர்பாக பிரத்யேகமாகப் பேட்டி அளித்தார்.

கேள்வி: இந்தியாவுடைய பி அணி சிறப்பாக விளையாடிக்கொண்டு வருகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அதிபன் பாஸ்கரன்: இந்தியாவுடைய அணிகள் மிகவும் வலுவாக உள்ளது. அதுவும் பி அணி சிறப்பாக விளையாடிக் கொண்டு வருகிறது. அதுமட்டும் இன்றி இந்த அணியில் மூன்று தமிழர்கள் உள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சியாகும் உள்ளது.

கேள்வி: 'இந்தியா பி' அணியில் நீங்கள் மூத்த வீரராக இருக்கிறீர்கள். மீதமுள்ள இளம் வீரர்களுக்கு என்ன விதமான அறிவுரையை வழங்கி வருகிறீர்கள்?

அதிபன் பாஸ்கரன்: பயிற்சியாளரும் நானும் பல்வேறு அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறோம். குறிப்பாக நானும் பயிற்சியாளரும் பல ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளோம். இதனால் ஒலிம்பியாட் போட்டி எவ்வாறு நடைபெறும். என்ன விதமான பிரச்னைகள் வரும் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

கேள்வி: இந்திய அணி பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது?

அதிபன் பாஸ்கரன்: நிச்சயமாக ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவோம். ஆனால், அனைத்துப்போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

கேள்வி: செஸ் உடைய வளர்ச்சி வருங்காலத்தில் எவ்வாறு இருக்கும்?

அதிபன் பாஸ்கரன்: கரோனா பரவல் நேரத்திலும் ஆன்லைன் மூலமாக பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது. எனவே தொடர்ந்து வளர்ச்சியை செஸ் போட்டியானது கண்டு வருகிறது. இனி வருங்காலத்திலும் செஸ் போட்டியானது தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கேள்வி: தாயகத்தில் விளையாடுவதால் விளையாட்டு வீரர்கள் மீது வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் உள்ளதா?

'நிச்சயமாக ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவோம்..!' - கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன்

அதிபன் பாஸ்கரன்: இதை அழுத்தம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. தாய் மண்ணில் விளையாடுவதைக்காட்டிலும் பெருமை வேறு எதுவும் கிடையாது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.