ETV Bharat / state

காலாண்டு தேர்வுகள் தனித்தனி வினாத்தாள் மூலம் நடத்த முடிவு

பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வுகள் மாநில அளவில் பொதுவான தேர்வாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகள் ஒரே தேர்வாக இல்லாமல் தனித்தனி வினாத்தாள்கள் மூலமாகவும் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வுகள் தனித்தனி வினாத்தாள் மூலம் நடத்த முடிவு
காலாண்டு தேர்வுகள் தனித்தனி வினாத்தாள் மூலம் நடத்த முடிவு
author img

By

Published : Sep 15, 2022, 1:13 PM IST

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத் தேர்வுக்கு முன்னதாக, போதிய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மாநில அளவில் பொது தேர்வாக நடத்தப்பட்டு வந்தன.

இதற்கான வினாத்தாள் அரசு தேர்வுத்துறை மூலம் தயார் செய்யப்பட்டு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. தேர்வு அட்டவணைகளும் இந்த மூன்று வகுப்புகளுக்கும் ஒரே தேதிகளில் தொடங்கி, முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் அச்சிட்டு வழங்கப்பட்ட போது கேள்வித்தாள் லீக் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வினாத்தாள்கள் வெளியானது பள்ளி கல்வித்துறையின் களங்கம் ஏற்படுத்துவது போல் அமைந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதிகளில் துவங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கேள்வித்தாள்களும் மாநில முழுவதும் ஒரே கேள்வித்தாளாக இல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு கேள்வித்தாள்களை தயாரித்துக் கொள்ளவும் கல்வித்துறை அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இதனை சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்துள்ளனர்.

அதன்படி சில மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதியிலிருந்தும் , சில மாவட்டங்களில் 21ஆம் தேதியிலிருந்தும் 11, 12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒட்டுமொத்த காலாண்டு தேர்வுகளையும் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய விமானங்களை அகற்றும் பணி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.