ETV Bharat / state

பாதுகாப்பு இல்லை; வால்வுடன் கூடிய என்-95 மாஸ்கை பயன்படுத்த வேண்டாம்! - stop wearing valved n95 face masks

சென்னை: வால்வுகள் பொருத்திய என்-95 முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வால்வு  பொருத்திய என்-95 முகக் கவசம் பயன்படுத்த கூடாது

author img

By

Published : Jul 21, 2020, 4:59 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தொற்று மக்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால் முகக்கவசங்களுக்கான தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இதில் பல்வேறு வகையான முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அதன்படி, கரோனாவை எதிர்த்துப் போராடும் முன்கள வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் என்-95 முகக்கவசங்களைப் போலவே தயாரிக்கப்பட்ட வால்வுகள் பொருத்திய முகக்கவசங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், வால்வுகள் பொருத்திய என்-95 முகக்கவசங்கள் கரோனா பாதிப்பைத் தடுக்காது என்பதால், அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வால்வு  பொருத்திய என்-95 முகக் கவசம் பயன்படுத்த கூடாது
வால்வு பொருத்திய என்-95 முகக் கவசம் பயன்படுத்த கூடாது
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் என்-95 முகக்கவசங்கள் தவிர்த்து, பொதுமக்களால் அதிகளவில் வால்வுகள் பொருந்திய என்-95 முககவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வால்வுகள் பொருத்திய என்-95 முகக்கவசங்கள் கரோனா பாதிப்பைத் தடுக்காது. மாறாக தீங்கைத்தான் விளைவுக்கும். எனவே இதுபோன்ற பொருத்தமற்ற முகக்கவசங்கள் அணிவதை தடுக்க மக்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உரிய நேரத்தில் மருந்துகளை அனுப்பி உதவிய துணை ஆட்சியர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.