சென்னை: தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 11ஆம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் சேர்வதற்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் 9ஆம் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 14ஆம் தேதி பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளியில் படிக்கவைத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சேர்க்கைக்கு முன்பதிவு
ஏற்கெனவே அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் தங்களுக்கான உயர் வகுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். இதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குவந்து செல்கின்றனர். அவர்களிடம் மாணவர்களின் பெயர், தந்தைப் பெயர், தொடர்பு எண்கள் போன்றவற்றை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும், பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை சேர்க்கைக்காக முன்பதிவு செய்யப்படுகிறது என தகவல் பலகையில் அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 14ஆம் தேதி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: அரசுப்பள்ளியில் கல்வியின் தரம், கட்டமைப்பை மேம்படுத்த குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு!