ETV Bharat / state

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு - Govt regulate private schools and collages staff salary

சென்னை : தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரிய மனுவிற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க  தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Govt regulate private schools and collages staff salary, notice to stats, MHC

author img

By

Published : Aug 31, 2020, 1:38 PM IST

அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், ”தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை.

மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைக் கண்காணிக்காததால், 50 விழுக்காடு லாபம், பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்கு செல்கிறது. தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்தக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுவதில்லை.

தற்போது, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், டீ கடை நடத்துவது, பூ விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும் என்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (ஆக. 31) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.