ETV Bharat / state

வாயு கசிவு குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்பக்குழுவிற்கு அரசு உத்தரவு! - எல் பி ஜி

திருவொற்றியூர் பகுதியில் வாயு கசிவு குறித்து தொழில்நுட்பக் குழு உடனடியாக மணலி, திருவொற்றியூர் தொழிற்பகுதிகளில் ஆய்வு செய்து தனது அறிக்கையினை இரண்டு நாட்களில் அரசுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

வாயு கசிவு குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்பக் குழுக்கு அரசு உத்தரவு

author img

By

Published : Jul 21, 2022, 11:04 PM IST

சென்னை: திருவொற்றியூர் மற்றும் மணலி தொழிற்சாலைப் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்.பி.ஜி மணம் போல் துர்நாற்ற வாயு கசிவு உணரப்பட்டதாக செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனைத் தொடந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் இப்பகுதிகளில் பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்படி, வாயு கசிவு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த வல்லுநர்களைக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பக் குழு உடனடியாக மணலி மற்றும் திருவொற்றியூர் தொழிற்பகுதிகளில் ஆய்வு செய்து, தனது அறிக்கையினை இரண்டு நாட்களில் அரசுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி இடைக்காலப்பொதுச்செயலாளராக செயல்படத் தடை விதிக்கக்கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.