ETV Bharat / state

சில மணி நேரத்தில் மாறிய அரசாணை - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை

சென்னை: பேருந்து கட்டணத்தை ஐம்பது விழுக்காடு உயர்த்துவதாக அரசாணை வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தமிழ்நாடு அரசு அதனை திரும்பப் பெற்றுக்கொண்டது.

tamilnadu bus
tamilnadu bus
author img

By

Published : May 31, 2020, 6:52 PM IST

Updated : May 31, 2020, 9:49 PM IST

தமிழ்நாட்டில் பொது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்து இயக்குவதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை 262-இன்படி வெளியிட்டார்.

அதில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர 6 மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில் பேருந்துகளை 50 விழுக்காடு இயங்கலாம். பேருந்துகளை இயக்கும்போது 60 விழுக்காடு இருக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். போக்குவரத்து மண்டலத்திற்குள் செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை.

அரசாணை 262-இன் அறிக்கை
முதலில் வெளியிடப்பட்ட அரசாணை.

பொது போக்குவரத்தில் பேருந்துகளில் பொதுமக்களை தகுந்த இடைவெளியுடன் அமர வைப்பதால் ஏற்படும் இழப்பீட்டை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக ஏற்கனவே வசூல் செய்யப்பட்டுவரும் கட்டணத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக கட்டணம் பெற அனுமதி வழங்கப்படுகிறது" என்பன உள்ளிட்ட விதிமுறைகளை அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்ட அரசாணை எண் 263-ன்படி, ”அரசாணை எண் 262ல் சில திருத்தங்கள் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை
திருத்தப்பட்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஆடிட்டோரியம் , கூட்ட அரங்குகள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் இல்லாமல் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்காக 50 விழுக்காடு கூடுதலாக தற்காலிகமாக உயர்த்திக் கொள்ளலாம் என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இருந்த பகுதி நீக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவமனைகளில் கரோனா படுக்கை வசதி அதிகரிக்க தீவிர நடவடிக்கை!

Last Updated : May 31, 2020, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.