ETV Bharat / state

பறிபோகிறதா அரசு வேலை? - தமிழ்நாடு அரசு மறு ஆய்வு - ஸ்டாலின்

பட்டதாரி இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளுக்கு அரசாணை எண் 115-ஆல் பாதிப்பு உள்ளதா? என்று அரசு பணியாளர் சங்கங்களின் கருத்துகளை கேட்ட பின்பே தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 9, 2022, 4:28 PM IST

Updated : Nov 9, 2022, 4:49 PM IST

சென்னை: அரசுப்பணிகளில் சீர்திருத்தம் செய்வதற்கு எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் சி, டி பிரிவுகளில் 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை நியமனம் செய்வது, பணியாளர்களுக்குப்பயிற்சி, பதவி உயர்வு போன்றவை குறித்து ஆய்வு செய்து அளிப்பதற்கு மனிதவள சீர்திருத்தக்குழுவை ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் எம்.எப்.பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ.ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக்குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக்குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை எண் 115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச்செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசு பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (நவ.9) மனு அளித்தனர்.

அவர்களுடைய கோரிக்கையை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இளைஞர்களின் கனவை வீணாக்கும் திமுக... அரசாணை 115-ஐ உடனடியாக ரத்து செய்க'

Last Updated : Nov 9, 2022, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.