ETV Bharat / state

பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் நேரு

author img

By

Published : Nov 5, 2022, 1:26 PM IST

மழை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

Etv Bharatபெரிய மழை வந்தாலும்  அதை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை தயார் - அமைச்சர் நேரு

சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் ஒரே நாளில் இன்று(நவ-5) தொடங்கப்பட்டது. அதில், சைதை தொகுதி வண்டிக்காரன் தெரு மேற்கு மாம்பலம் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மா சுப்பிரமணியம் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 15-35 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் பெய்த 10 சென்டி மீட்டர் மழையில் பெரிய பாதிப்பு இருந்தது.

முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி நகராட்சிதுறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். அதனால் 7 மாதங்களுக்கு உள்ளாகவே 90% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு 4 நாட்களாக முதலமைச்சர் அறிவுரைப்படி கட்டி முடிக்கப்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டு வருகிறார்.

மழை வந்த பின் மஞ்சள் காமாலை, சளி உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். அதனால் தான் இந்த சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி நடக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடக்கிறது. ஒரே நாளில் ஒரு மாநகரத்தில் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் சேர்ந்து நடைபெறுகிறது. இன்று மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே என் நேரு, "கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தால் கூட சென்னைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சென்னை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நிதி ஒதுக்கி தந்து பணிகளை முறையாக செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் அதிகாரிகளும் செய்ல்பட்டு வருகின்றனர். அதற்காக முதலமைச்சருக்கும், அமைச்சர்கள் ,அதிகாரிகளுக்கும் நன்றி. சாலைகள் பள்ளமாக இருந்தால் அதை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்ய களத்தில் செயல்பட்டு வருகிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்' - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.