ETV Bharat / state

சத்துணவுத் திட்டத்தில் உணவூட்டும் செலவினம் உயர்வு! - school afternoon meals rate increased

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், சமையல் எரிவாயு, தாளித்தல் ஆகியவற்றிற்கான உணவூட்டும் செலவினை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சத்துணவு திட்டத்தில் உணவூட்டும் செலவினம் உயர்வு  சத்துணவு திட்டம்  சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி  school afternoon meals rate increased  govt increased the amount to spend afternoon meals for school students
govt increased the amount to spend afternoon meals for school students
author img

By

Published : Dec 3, 2019, 7:24 PM IST

இதுகுறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியத் திட்டங்களில் பயனடையும் பயனாளிகளுக்கான உணவூட்டும் செலவினத்தை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு உயர்த்தச் சொல்லி கேட்கக் கூடாது எனும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நாளொன்றுக்கு ஒரு பயனாளிக்கான செலவினத்தை உயர்த்தியுள்ளது.

அதன்படி தொடக்கப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு, நாளொன்றுக்கு காய்கறிகள் 96 பைசாவுக்கும், தாளித்தல் 25 பைசாவுக்கும், எரிபொருள் 54 பைசாவுக்கும் என ஒரு ரூபாய் 75 பைசாவுக்கு அனுமதிக்கப்படுகிறது. பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு காய்கறிகள் 113 பைசாவுக்கும், தாளித்தலுக்கு 50 பைசாவுக்கும், எரிபொருள் 65 பைசாவுக்கும் என இரண்டு ரூபாய் 28 பைசாவுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், உயர் நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு காய்கறிகள் 110 பைசாவுக்கும், தாளித்தலுக்கு 25 பைசாவுக்கும், எரிபொருள் 54 பைசாவுக்கும் என ஒரு ரூபாய் 89 பைசாவும்; பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு காய்கறிகள் 127 பைசாவுக்கும், தாளித்தல் 50 பைசாவுக்கும், எரிபொருள் 54 பைசாவுக்கும் என ஒரு ரூபாய் 89 பைசாவுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகளில் கீழ் பயன்பெறும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு ஒரு ரூபாய் 81 பைசாவும், பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு ஒரு ரூபாய் 81 பைசாவாகவும் உயர்த்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி வழங்கியதால், ஆண்டொன்றிற்கு அரசிற்கு 48 கோடியே 43 லட்சத்து 30ஆயிரம் செலவாகுமென அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவி ஃபாத்திமா செல்போனில் உள்ள தற்கொலைக் குறிப்பு உண்மையானது - தடயவியல் துறை

Intro:சத்துணவு திட்டத்தில் உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவு

Body:சத்துணவு திட்டத்தில் உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவு

சென்னை,
பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், சமையல் எரிவாயு, காய்கறிகளை தாளித்தல் ஆகியவற்றிற்கான உணவூட்டும் செலவினை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உணவு செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி ஆர் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய திட்டங்களில் பயனடையும் பயனாளிகளுக்கான உணவூட்டும் செலவினத்தினை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு உயர்வு கேட்க கூடாது எனும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளொன்றுக்கு ஒரு பயனாளிக்கான செலவினத்தை உயர்த்தி ஆணையிடுகிறது.

அதன்படி தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கான தொகை அனுமதி அளிக்கப்படுகிறது.

காய்கறிகள் 96 பைசா,தாளிதம் 25 பைசா,எரிபொருள் 54 பைசா என ஒரு ரூபாய் 75 பைசா பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு
காய்கறிகள் 113 பைசா,தாளிதம் 50 பைசா,எரிபொருள் 65 பைசா என 2ரூபாய் 28 பைசா பருப்பு அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான செலவினம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

காய்கறிகள் 110 பைசா,தாளிதம் 25 பைசா,எரிபொருள் 54 பைசா என ஒரு ரூபாய் 89 பைசா பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு
காய்கறிகள் 127 பைசா,தாளிதம் 50 பைசா,எரிபொருள் 65 பைசா என 2ரூபாய் 42 பைசா பருப்பு அனுமதிக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகளில் கீழ் பயன்பெறும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவூட்டு செலவினம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

காய்கறிகள் 96 பைசா,தாளிதம் 30 பைசா,எரிபொருள் 26 பைசா என ஒரு ரூபாய் 52 பைசா பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு
காய்கறிகள் 110 பைசா,தாளிதம் 45 பைசா,எரிபொருள் 26 பைசா என ஒரு ரூபாய் 81 பைசா பருப்பு அனுமதிக்கப்படுகிறது.
உணவுப் செலவினத்தை உயர்த்தி வழங்கியதால் ஆண்டொன்றிற்கு அரசிற்கு 48 கோடியே 43 லட்சத்து 30 ஆயிரம் மட்டும் செலவாகுமென அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.