ETV Bharat / state

மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு தகவல் - மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்

சென்னை: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Power fare paying time extended
Power fare paying time extended
author img

By

Published : May 18, 2020, 3:57 PM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு நீட்டிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ”சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் ஆகியவை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைவழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரின் வாதத்தைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: டிஸ்காம்களுக்கு ரூ.90,000 கோடி நிதி தொகுப்பு அளிக்க முடிவு - மின்சாரத்துறை அமைச்சகம்

For All Latest Updates

TAGGED:

Power fare
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.