தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 'சிறப்பாக பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும்' எனத் தெரிவித்துள்ளது.
நிதித்துறை வெளியிட்டுள்ள மற்றொரு ஆணையில், 'கரோனா வைரஸ் தொற்றுநோயால், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என 2020ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சேகரிப்பு செயல்முறைக்கு விலக்கு அளித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர்களின் தனிப்பட்ட தோற்றம் மற்றும் ஆயுள் சான்றிதழை வழங்குதல் ஆகிய இரண்டும் 2020ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சேகரிப்பு செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.