ETV Bharat / state

முழு ஊரடங்கால் தவிக்கும் மக்கள் - ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க அனுமதி! - முழு ஊரடங்கால் போக்குவரத்தின்றி தவிக்கும் மக்கள்

ஊரடங்கு நாள்களில் ரயில், விமான பயணிகளின் வசதிக்காக, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க அனுமதி!
ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்க அனுமதி!
author img

By

Published : Jan 22, 2022, 8:17 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு வார நாள்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும், முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இதனால் 10 விழுக்காடு பயணிகள், குறிப்பாக விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் டாக்சி மற்றும் ஆட்டோக்கள் கிடைப்பதில் சிரமங்களும், அதிக கட்டணம் செலுத்தியும் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்தன.

அதன் பேரில், ஊரடங்கு சமயங்களில் ரயில் சேவைகள் முழுவதுமாக இயக்கப்படுவதால் புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்டிரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையங்களில், ரயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள், வெளியூர் செல்லும் பயணிகள் சிரமப்பட்டதாக தெரியவந்தது.

எனவே, பொதுமக்களின் இச்சிரமத்தை தவிர்க்க, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி.சரத்கர் தலைமையில், மேற்படி சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள், டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

முன்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊரடங்கு சமயத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்து தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்தது. ஆனால் தற்போது ரயில்வே அலுவலர்கள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பார்கள்.

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் வெறுமையாக திரும்பும்போது, போலீசார் வாகனத்தை நிறுத்தி அவர்களை சிறைபிடிப்பதாக சங்கங்கள் புகார் கூறியுள்ளர். காவல் துறையினர் சோதனையின்போது வாகன ஒட்டுநர்கள் பயணிகளின் ரயில் டிக்கெட்டின் பிரதியை தங்களது கைப்பேசியல் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

போக்குவரத்து ஆணையருக்கு கடிதம்

இது குறித்து போக்குவரத்து மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் உயர் அலுவலர்களின் தொடர்பு எண்கள் மேற்கூறிய அனைத்து சங்கத்தினரருக்கும் அளிக்கப்பட்டு, ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

OLA, Uber டாக்சிகளின் அலுவலர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் கூட்டம் ஜன 20ஆம் தேதியன்று நடத்தப்பட்டு அவர்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், ஒட்டுநர்கள் பயணிகளை அவர்களது இடத்தில் இறக்கிவிட்டு திரும்பி காலியாக வருவதனால் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து OLA, Uber அலுவலர்கள் இதை ஏற்கனவே தங்கள் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக முடிவு செய்யப்படவுள்ளது.

காவல் துறை உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையினருடன், போக்குவரத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 தடுப்பூசி போட்டாச்சு; மாஸ்க் எதற்கு? தகராறு செய்த காவல் துறை அலுவலர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.