ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்? - ஆளுநர் ஆர்.என்.ரவி - புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்?

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என துணை வேந்தர்கள் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை வேந்தர்கள் கூட்டம்
துணை வேந்தர்கள் கூட்டம்
author img

By

Published : Oct 30, 2021, 7:28 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை

மிக முக்கியமாக புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதாகவும், அதனை தேர்வு செய்து பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கடும் எதிர்ப்பு

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளி அன்று வரும் மகாவீர் நிர்வான் நாள்: சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.