ETV Bharat / state

வடமாநிலப்பள்ளிகளில் தமிழ் மொழி மூன்றாம் மொழியாக அறிவிக்க ஆர்வம்: ஆளுநர் ஆர்.என்.ரவி! - Ravi visits Central Institute of Tamil Studies

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

வடமாநில பள்ளிகளில் தமிழ் மொழி மூன்றாம் மொழியாக அறிவிக்க ஆர்வம்...ஆளுநர் ஆர்.என்.ரவி!

author img

By

Published : Sep 14, 2022, 10:23 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இன்று (செப்.14) வருகை புரிந்து, அந்நிறுவனத்தின் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிறுவனம் செம்மொழித் தமிழ் ஆய்வுகளை இந்தியாவிலும் உலகமெங்குமுள்ள அனைத்து நாடுகளுக்கும் கொண்டுச் செல்வதற்காக 2007ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. ஆளுநருக்கு நிறுவன இயக்குநர் பேராசிரியர். சந்திரசேகரன், நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் குறித்து ஒரு விளக்கக்காட்சிக் காணொலி மூலம் விளக்கினார். பின்னர் ஆளுநர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆய்வு வசதிகளைப் பார்வையிட்டார்.

ஆளுநர் தனது உரையில், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் தமிழ் மொழியின் வளம் இந்திய சமூக நாகரிக வளர்ச்சியின் பிரதிபலிப்பாயிருக்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெருமுயற்சிகளைப் பாராட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியத்திலுள்ள அறிவு, தமிழ்க் கலாசார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்கும் வகையில் வழிவகை செய்வதின் வாயிலாகத் தமிழ்நாட்டிற்கு அப்பால் கொண்டுசெல்ல முற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவிலுள்ள சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் ஆளுநர் எடுத்துரைத்தார். தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், தமிழ் அல்லாத மாணவர்களைக்கவரும் வகையில், எளியவழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவை ஆக்கப்பூர்வமாகவும் எளிதாகவும், தமிழ் அல்லாதவர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆளுநர் செம்மொழி நிறுவன வளாகத்திலுள்ள பூங்காவில் மரக்கன்றை நட்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்தார். அவரது வருகையின்போது, பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (துணைத் தலைவர், செதமநி), பேராசிரியர் என். பஞ்சநதம் (துணைவேந்தர், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம்), பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:"இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.