சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி இரா. முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்த அன்னார் அவர்கள், சேடப்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பெரியகுளம் தொகுதியிலிருந்து இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவரது மறைவு இந்திய நாட்டிற்கும், குறிப்பாகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இந்தத் துயரமான நேரத்தில், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:நீரா ராடியாவின் ஆடியோவில் எந்தவித குற்றமும் இல்லை - விசாரணையை கைவிடுவதாக சிபிஐ தகவல்!