சென்னை: சட்டப்பேரவையில் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையின்போது அவரது உறவினர் ஒருவர் மாடத்தில் அமர்ந்து செல்போன் மூலமாக வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக, ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த அவை உரிமை மீறல் குறித்து சபாநாயகர் உடனடியாக உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டி.ஆர்.பி.ராஜா வலிறுத்தினார். இது தொடர்பாக சபாநாயகர் தெரிவிக்கும் போது, அவை உரிமை மீறலுக்கான காரணங்கள் இருப்பதாக கருதுவதால், இதனை உடனடியாக ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.
இந்நிலையில் இன்று அவை உரிமைக் குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவையின் மரபு விதிகளின்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே ஊடகங்களில் ஒளிபரப்பப்பட வேண்டும், மாறாக செல்போன் வீடியோ பதிவு செய்யப்பட்டது குறித்து, விசாரணை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அன்று அவை காவலில் இருந்த நபர்களிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும் கூட்டத்தில், பேரவையின் விதியை மீறிய ஆளுநரின் விருந்தினர் மீது விசாரணை நடத்த அவருக்கு, நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற 16 உறுப்பினர்கள் கொண்ட இந்த இந்த அவை உரிமைக் குழு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டி, நல்லதம்பி, ஈஸ்வரப்பா, பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "ஈரோடு இடைத்தேர்தலில் நாங்க தான் ஜெயிக்கிறோம்.." - அமைச்சர் கே.என்.நேரு