ETV Bharat / state

'நாடாளுமன்றத்தை செங்கோல் அலங்கரித்த நாள்; ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படும்' - ஆளுநர் ரவி

author img

By

Published : May 28, 2023, 11:02 PM IST

நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டதையடுத்து ஆண்டுதோறும் இதே தேதியில் ஆளுநர் மாளிகையில் விழா நடத்தப்படும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் செங்கோல் நிறுவப்பட்ட தினம் கொண்டாடப்படும் என ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் (New Parliament Building) பிரதமர் மோடியின் தலைமையில் இன்று (மே 28) 'செங்கோல்' (Sengol) நிறுவப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இதே தேதியில் ஆளுநர் மாளிகையில் விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதையடுத்து இது தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் போது, அதில் செங்கோல் நிறுவப்படும் விழா டெல்லியில் இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா மற்றும் செங்கோல் நிறுவுதல் குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, அவரது மனைவி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சியில் 94 வயதான இயற்கை விவசாயி லட்சுமி அம்மாள் பங்குபெற்று குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்புரைகளுக்கு முன்பாக பரதநாட்டியம், நாதஸ்வர இசை நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும் செங்கோலின் பெருமை குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவிகள் பேசினர். பின்னர் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “வரலாற்றில் முக்கியமான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. காரணம் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இந்த செங்கோல் சபாநாயகருக்கு வலது புறம் நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சி காலத்தில், ஆட்சி மாற்றத்தின் போது செங்கோல் வழங்கப்பட்டது. அதுபோன்று பெருமை வாய்ந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் இன்று நிறுவப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர், சர்தார் வல்லபாய் பட்டேல். அதேபோல், இந்தியாவுக்கு அருமையான அரசியல் அமைப்பு சட்டத்தை பாபாசாகிப் அம்பேத்கர் வழங்கினார்.

செங்கோல் என்பது அறம், தர்மம் மற்றும் நேர்மையை குறிக்கக் கூடியது. செங்கோல், என்றும் ஆட்சி பரிமாற்றத்துக்காக வழங்கப்பட்டது. மிகச்சிறந்த கலாச்சாரம், நாகரிகம், மற்றும் ஆன்மீகத்தை கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாதி மற்றும் மதத்தால் சமூகத்தில் மக்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது, தமிழ்நாட்டிற்கு பெருமை. செங்கோல் நிறுவப்பட்ட தினமான மே 28ஆம் தேதி ஆண்டுதோறும் ஆளுநர் மாளிகையில் விழா கொண்டாடப்படும்” என நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

இதையும் படிங்க: "புதிய நாடாளுமன்ற கட்டடம் எம்.பி.க்களுக்கு உத்வேகம் அளிக்கும்" - சபாநாயகர் ஓம் பிர்லா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.