சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, பதவியேற்ற பிறகு தற்போது இரண்டாவது முறையாக டெல்லி செல்கிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுவருவது குறித்தும், உள்ளாட்சி தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்தும், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் ஆளுநரை சந்தித்து புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் தமிழ்நாடு அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற கூடலூர் தலைமை காவலர் பணியிடை நீக்கம்