இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவிட் 19 தொற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ரூ .1 கோடி நன்கொடை அளித்துள்ளார். கோவிட்- 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், தமிழ்நாட்டின் ஆளுநர் விருப்பப்படி மானியங்களிலிருந்து நமது நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் நிதி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ஆகியவற்றிக்கு 2 கோடி ரூபாய் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் தனது ஒரு மாத சம்பளத்தை பிரதமரின் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தேவைப்படுபவர்களுக்கு உதவ பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கரோனா: செவிலியருக்குப் பதிலாக ரோபோவா? அரசு மருத்துவமனையின் சோதனை முயற்சி...