ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநர் மக்களிடம் வேண்டுகோள்! - Banwarilal Purohit

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22ஆம் தேதி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர்
author img

By

Published : Mar 20, 2020, 11:56 PM IST

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22ஆம் தேதி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலகம் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரதமர் மோடியின் வேண்டுகோளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தேவையில்லாமல் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநராக நான் விடுக்கும் வேண்டுகோளில், 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வெளியிடங்களில் கூட வேண்டாம். அவர்கள் தங்கள் வீட்டினை விட்டு வெளியே வரவேண்டாம். இது குறித்த விழிப்புணர்வினை இளைஞர்கள் தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், விமான நிலைய பணியாளர்கள் ஆகியோரை மரியாதை செய்யும் விதமாக மாலை ஐந்து மணி அளவில் ஐந்து நிமிடம் கைகளைத் தட்ட வேண்டும். 22 ஆம் தேதி அனைவரும் தாங்களாகவே வீட்டிற்குள் இருந்து நாட்டிற்காக சேவை ஆற்ற வேண்டும்.

இது எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை சந்திப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மேலும் பொதுமக்கள் 22ஆம் தேதி தாங்களாக முன்வந்து ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பரிதாப உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.