ETV Bharat / state

"வேறுவழியின்றி ஒப்புதல் அளித்ததற்கு நன்றி, என்றும் வெல்லும் சமூகநீதி" - ஸ்டாலின் - 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா குறித்து ஸ்டாலின்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு வேறுவழியின்றி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், என்றும் சமூகநீதியே வெல்லும் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin on Governor approving 7.5 reservation bill

author img

By

Published : Oct 30, 2020, 4:07 PM IST

Updated : Oct 30, 2020, 4:34 PM IST

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒப்புதலுக்கு அனுப்பி, ஒன்றரை மாதங்களான நிலையிலும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆளுநர் தரப்பில் அளித்த பதிலில், மசோதா தொடர்பாக முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (அக்.30) ஒப்புதல் அளித்தார்.

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

திமுக நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதி! எப்போதும் வெல்லும் சமூகநீதி!!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் - திருநாவுக்கரசர்

Last Updated : Oct 30, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.