சென்னை: உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
-
#கிறிஸ்துமஸ் திருநாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தொண்டு மற்றும் தியாகத்தின் செய்தியை நினைவுகூர்ந்து, மனிதகுல சேவைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.- ஆளுநர் ரவி pic.twitter.com/cOpJvTbwqt
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#கிறிஸ்துமஸ் திருநாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தொண்டு மற்றும் தியாகத்தின் செய்தியை நினைவுகூர்ந்து, மனிதகுல சேவைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.- ஆளுநர் ரவி pic.twitter.com/cOpJvTbwqt
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2023#கிறிஸ்துமஸ் திருநாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தொண்டு மற்றும் தியாகத்தின் செய்தியை நினைவுகூர்ந்து, மனிதகுல சேவைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.- ஆளுநர் ரவி pic.twitter.com/cOpJvTbwqt
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2023
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து: "கிறிஸ்துமஸ் திருநாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தொண்டு மற்றும் தியாகத்தின் செய்தியை நினைவுகூர்ந்து, மனிதக்குல சேவைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்"
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கிறிஸ்துமஸ் வாழ்த்து: "கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்! அவர் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 அன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
கிறித்தவ சமயத்தைப் பரப்பிடத் தமிழ்நாடு வந்த தொண்டர்கள் பலர். அவர்களுள் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால், 'தமிழ் மாணவன்' என்று தம் கல்லறையில் எழுதச் செய்த அறிஞர் ஜி.யு.போப், தமிழ் செம்மொழி எனப் பறைசாற்றிய அறிஞர் கால்டுவெல், சதுர் அகராதி தந்து, 'தமிழ் அகராதியின் தந்தை' எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை. தமிழக அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
-
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி pic.twitter.com/QW6pVDIsxU
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி pic.twitter.com/QW6pVDIsxU
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 24, 2023மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி pic.twitter.com/QW6pVDIsxU
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 24, 2023
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: "கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்"
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: "இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: "எண்ணிலடங்கா துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்த போதிலும் அன்பு தான் உலகின் ஆகப்பெரிய சக்தி என்பதை நிரூபித்து அதன் வழியாகவே இவ்வுலகை வென்றெடுத்தவர் இயேசுநாதர்.
பேரன்பையும் நல் சமாதானத்தையும் உலகெங்கும் பரப்பும் நாளாக அமைந்திருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை, உலக சகோதரத்துவத்தையும், உண்மையான வாழ்வியல் தத்துவத்தையும் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.
இயேசுபிரான் அவதரித்த திருநாளைக் கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: "உலகெங்கிலும் போராட்டங்களும், துன்பங்களும் நிறைந்த மனித வாழ்வில், இதயக் காயங்களுக்கு மருந்தாகவும், வாழ்வின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாகவும், மனிதக் குலத்துக்கே நீதிமொழிகளையும், உபதேசங்களையும் தந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை, கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக, தரணியெங்கும் கொண்டாடும் கிறித்துவப் பெருமக்களுக்குக் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறாக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் முகாமிட்ட மைசூர் குழுவினர்.. எதற்காக தெரியுமா?