ETV Bharat / state

விரைவில் நியாயவிலைக்கடைகளில் Google Pay, Paytm - அமைச்சர் ஐ.பெரியசாமி - அமைச்சர் ஐ பெரியசாமி

நியாயவிலைக்கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நியாயவிலைக் கடைகளில் Google Pay, Paytm - அமைச்சர் ஐ.பெரியசாமி

author img

By

Published : Sep 2, 2022, 5:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள சில நியாயவிலைக்கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநிலம் முழுவதிலுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான (Quality Control Management) ISO-9000 தரச்சான்றிதழும், Security in Supply Chain Management and Storage-க்கான ISO - 28000 தரச்சான்றிதழும், உணவுப்பொருட்கள் இருப்பு வைப்பதற்குத் தேவையான FSSAI சான்றிதழும் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிகி| 2கிகி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 34,773 நியாயவிலைக் கடைகளில் 33,377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் கிராமப்பகுதிகளில் 16,994 முழுநேரக் கடைகளும், நகர்ப்புறங்களில் 6,942 கடைகளும் ஆக மொத்தம் 23,936 நியாயவிலைக் கடைகள் முழு நேரக்கடைகளாக இயங்கி வருகின்றன.

கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 33,377 நியாயவிலைக்கடைகளில் 17,473 கடைகள் அரசு கட்டடங்களில் இயங்கி வருகின்றன. 3,211 கடைகள் சொந்த கட்டடங்களிலும் 6,981 கடைகள் வாடகை கட்டடங்களிலும் மற்றும் 5,712 கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.

மாநிலம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக்கடைகளில் வாடகைக்கட்டடங்களில் இயங்கும் 6,907 கடைகளுக்கு புதிய சொந்த கட்டடம் கட்டுமானம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆண்டொன்றுக்கு 300 கட்டடங்கள் வீதம் கட்ட திட்டமிடப்பட்டு 862 கடைகளுக்கு அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 243 நியாயவிலைக் கடைகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, இப்புதிய கட்டடங்கள் MGNREGA, MLACDS, MPLADS மற்றும் CSR நிதிகளின் மூலம் கட்டப்பட்டு வருகின்றன.

மக்களுக்குக் கலப்படமற்ற தரமான நுகர்வோர் பொருட்களை வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசின் ஊட்டி தேயிலை, அரசு உப்பு, பனை வெல்லம் உள்ளிட்ட காதிப்பொருட்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பெறும் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் தூள், சிறு தானியங்கள், தேன், மிளகு, காபிப்பொடி, சமையல் எண்ணெய் வகைகள், மாவு வகைகள் மசாலா பொருட்கள், மளிகைப் பொருட்கள், சோப்பு ஆகியவையும், நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற நீதிபதி உத்தரவு ரத்து - தீர்ப்பின் முழுவிவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.