ETV Bharat / state

கால்நடை மருத்துவப் படிப்பு - அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம் - Government school students

கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே கால்நடை படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு
கால்நடை மருத்துவப் படிப்பு
author img

By

Published : Jul 23, 2021, 10:39 AM IST

சென்னை: கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பட்டியலின்படி அரசுப்பள்ளிகளில் 45 லட்சத்து 17 ஆயிரத்து 677 பேர் படிக்கின்றனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 22 லட்சத்து 28 ஆயிரத்து 992 பேர் படிக்கின்றனர்.

12 ஆம் வகுப்பு மாணவர்கள் விபரம்

மாநில அரசின் அனுமதி பெற்று இயங்கும் தனியார் பள்ளிகளில் 14 லட்சத்து 40 ஆயிரத்து 945 பேரும், மெட்ரிக் பள்ளிகளில் 38 லட்சத்து 58 ஆயிரத்து 563 மாணவர்களும், சிபிஎஸ்இ பள்ளியில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 943 மாணவர்களும், ஐஎஸ்சிஇ, ஐஜிசிஎஸ்இ, கேம்பிரிட்ஜ் பள்ளிகளில் 81,094 மாணவர்களும், ரயில்வே, ராணுவம், சைனிக் பள்ளிகளில் 59,071 மாணவர்களும் படித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 65 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் 29 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கால்நடை மருத்துவம்

கால்நடை மருத்துவம் அறிவியல் பட்டப்படிப்பில் 2016-17 ஆம் ஆண்டில் 306 இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 17 பேர் சேர்ந்துள்ளனர்.

2017-18 ஆம் ஆண்டில் 348 இடங்களில் 12 பேர்

2018-19 ஆம் ஆண்டில் 341 இடங்களில் 10 பேர்

2019-20 ஆம் ஆண்டில் 322 இடங்களில் 13 பேர்

2020-21 ஆம் ஆண்டில் 434 இடங்களில் 13 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பிடெக் படிப்பு

அதேபோல் பிடெக் உணவுப்பதப்படுத்துதல், கோழி வளர்ப்பு, பால்வள தொழிற்நுட்பம் ஆகிய படிப்புகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2016-17 ஆம் கல்வியாண்டில் 6 பேர் சேர்ந்துள்ளனர்.

2017-18 ஆம் ஆண்டில் 79 இடங்களில் 3 பேர்

2018-19 ஆம் ஆண்டில் 74 இடங்களில் 4 பேர்

2019-20 ஆம் ஆண்டில் 69 இடங்களில் 9 பேர்

2020-21 ஆம் ஆண்டில் 95 இடங்களில் 4 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கால்நடை மருத்துவப்படிப்பு மிகவும் கடினமாகவும், அதிக மாணவர்கள் சேர விரும்புவதால், அதற்கான கட்ஆப் மதிப்பெண்களும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெருமளவில் சேர முடியாத நிலை உள்ளது.

இதையும் படிங்க: பிஆர்க் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.