சென்னை: அறநிலையத் துறை சார்பில் 18 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ள நிலையில், முதற்கட்டமாக நான்கு கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை உயர் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாகச் சென்னை, கொளத்தூர், திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்), தொப்பம்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) என நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கொளத்தூரில் தொடங்கியுள்ள கல்லூரிக்கு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அண்ணாமலை மீது வழக்குப்பதிவு