கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்படவில்லை.
கடந்த மாதத்தில் 75 விழுக்காடு ஊழியர்கள் சுழற்சி முறையில் அரசு அலுவலகத்தில் பணியாற்றினர். தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 100 விழுக்காடு பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ளது. இதையடுத்து வருகின்ற டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு தொடர்பான முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.