ETV Bharat / state

ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை: அரசாணை பிறப்பிப்பு! - government of tamil nadu order

சென்னை: அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரச ஆணை
தமிழ்நாடு அரச ஆணை
author img

By

Published : Aug 14, 2020, 2:11 PM IST

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் சட்டப் பேரவை விதி எண் 110 இன் கீழ் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளுடன் கீழ்க்காணும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதில், "பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும். அதனை செயல்படுத்த கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்காணும் நகரும் நியாயவிலைக் கடைகள் கீழ் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(அ) அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு:

1. மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அம்மா நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்படும் நாள், செயல்படும் இடம் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதியினைப் பெறவேண்டும்.

2. மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயிக்கும் இடங்களில், ஒவ்வொரு அம்மா நகரும் நியாய விலைக்கடையும் இயங்கும். அவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தினங்களில், செயல்பட வேண்டும். மேற்படி நகரும் நியாயவிலைக் கடை செயல்படவேண்டிய நாள் அரசு விடுமுறை தினமாக இருக்கும்பட்சத்தில், அடுத்த வேலை நாளில், மேற்படி நகரும் நியாயவிலைக் கடை செயல்பட வேண்டும்.

3. விநியோகம் செய்யும் இடமானது அரசு கட்டிடம், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டிடங்கள் அல்லது பொதுமக்கள் அதிகமாக கூடும் ஊர் பொது இடமாக இருக்கலாம்.

4. அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் மாவட்ட ஆட்சியரால் நன்கு விளம்பரம் செய்யப்படவேண்டும்.

5. அம்மா நகரும் நியாயவிலைக் கடை இயங்கும் இடத்தில் பெயர் பலகை ஒன்றினை, அனைவரும் அறியும் வண்ணமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நாள், குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் பகுதி, கடை செயல்படும் நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் வைக்கப்பட வேண்டும்.

6. அம்மா நகரும் நியாயவிலைக் கடை மூலம் பொருள்களைக் குறிப்பிட்ட நாளில் பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதாரர்கள் எவரேனும் இருப்பின், அவர்களை பின் நாட்களில் தாய்க்கடையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம்.

(ஆ) வாகன வாடகை நிர்ணயக் குழு:

அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை செயல்படுத்த தேவையான வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள ஏதுவாக, வாடகை நிர்ணயம் செய்வது அவசியமாகிறது. எனவே, இதற்கென கீழ்க்கண்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவினை மாவட்ட அளவில் அமைக்க அனுமதி வழங்கலாம்.

1. மாவட்ட ஆட்சியர் (குழு தலைவர்)

2. துணைப்பதிவாளர் (பொதுவிதி)

3. மேலாண்மை இயக்குநர் (குழு கூட்டுநர்)

மேற்படி குழுவானது வாகனத்திற்கான வாடகையினையும், கட்டுப்பாட்டுப் பொருள்களை ஏற்றி இறக்க மூட்டை ஒன்றிற்கான கூலியையும் சந்தை நிலவரத்திற்கு உட்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யலாம்.

அதனடிப்படையில், அந்தந்த மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு வாகன வாடகை, ஒரு மூட்டைக்கான ஏற்றுக்கூலி, இறக்குக்கூலியினையும் அனுமதிக்கலாம்.

(இ) இதர நிபந்தனைகள்:

1. வாகனம் மூடிய வாகனமாக இருக்க வேண்டும்.

2. வாகனத்தில் எடைத்தராசு, விற்பனை முனையக் கருவி (POS) இயந்திரம் முதலியவை கொண்டு செல்லப்பட வேண்டும்.

3. தேவை இருப்பின் பதிவேடுகள், படிவங்கள் அனைத்தும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

4. கட்டுப்பாட்டுப் பொருட்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

5. தரமான கட்டுப்பாட்டுப் பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படவேண்டும்.

6. மின்னணு எடைத் தராசின் மின்கலம், விற்பனை முனையக் கருவி (POS) ஆகியவை போதுமான அளவு மின்னேற்றம் (Charging) செய்யப்பட்டிருக்க வேண்டும் . நகரும் நியாயவிலைக் கடையில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருள்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்களுக்கு தகுந்த இடப்பெயர்வு காப்பீடு (Transit Insurance) செய்யப்பட்டிருக்க வேண்டும்.

(ஈ) இது தொடர்பாக பின்வரும் கூடுதல் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன:

1. அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள், செயல்படுத்த ஏதுவாக தங்கள் மண்டலத்தில், தேவையான எண்ணிக்கையில் வாகனங்களை தேர்ந்தெடுத்து, தயார் நிலையில் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. அம்மா நகரும் நியாயவிலைக் கடைக்களுக்கென இயக்கப்படும் வாகனங்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய முகப்புப் பதாகை ( Banner ) மாதிரி தங்களுக்கு தனியே அனுப்பப்படும், இம்முகப்புப் பதாகையினை அனைத்து நகரும் நியாயவிலைக் கடைகளிலும் பொருத்தி இயக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. எடைத்தராசு இல்லாத நியாயவிலைக்கடைகளுக்கு எடைத்தராசு கொள்முதல் செய்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . எனவே, தங்கள் மண்டலத்திற்கு தேவையான எடைத்தராசுகளை கொள்முதல் செய்கையில், இந்நகரும் நியாயவிலைக் கடைகள், இயக்கப்பட வேண்டிய நியாயவிலைக் கடைகளுக்கு, முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்து வழங்கலாம்.

4. நகரும் நியாயவிலைக்கடைகளுடன் கொண்டு செல்லப்படும், விற்பனை முனையக் கருவிகளில் மின்னேற்றம் நிலைத்து இருக்கும் ( Battery Backup ) வகையில், தொடர்புடைய நிறுவனப் பொறியாளர்களைத் தொடர்பு கொண்டு, பழுதடைந்த மின்கலங்களை மாற்றி வைத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி வேண்டும்.

5. வாகன வாடகைக் குழு அமைத்து அரசு ஆணையிட்டதன் அடிப்படையில், குழுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து, வாடகை நிர்ணயம், ஏற்றுக்கூலி, இறக்குகூலி போன்றவை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து செயல்படவும் கேட்டுக் கொள்கிறேன்.

6. அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு தேவையான பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை தாய்க்கடையிலிருந்து ( அல்லது ) பகுதிநேரக் கடையிலிருந்து நகர்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

7. அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடைகளில், மாற்றுத் திறனாளிகள் இருப்பின் அவர்களை வேறொரு நியாயவிலைக் கடைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

8. அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து பொதுவிநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்ளையும், அன்றைய நாளிலேயே ஒரே தவணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். கிடங்கு இருப்பின்மை காணப்படின் தொடர்புடைய அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பினை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9. தரமான பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வழங்கப்படுவதை கள அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

10. மேற்கூறிய அரசாணையின் விவரம், பதிவாளரின் அறிவுரைகளை தங்கள் மண்டல சார்நிலை அலுவலர்களுக்கும், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் தொடர்புறுத்தி, புகாருக்கு இடமின்றி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திட உரிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் மண்டலத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டம் தொடங்கிட ஏதுவாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு, இணைப்பில் கண்டுள்ளவாறு தங்களது மண்டலத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கிட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவாளர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிறப்பாக செயல்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு பதக்கம் - தமிழ்நாடு அரசு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.