ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாட்டில் தடை! - vinayagar sathurthi

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாட்டில் தடை

author img

By

Published : Aug 13, 2020, 12:36 PM IST

Updated : Aug 13, 2020, 12:52 PM IST

12:26 August 13

கரோனா எதிரொலியின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது எனவும்; விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாடவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், பண்டிகை கொண்டாடத் தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும்; அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. 
சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும் கோயில் நிர்வாகத்தினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தியுள்ளது. 

Last Updated : Aug 13, 2020, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.