தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை வாலாஜா சாலையில் கூடிய அரசு ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலளார் செல்வம், ”இளைஞர்களின் வேலைவாய்பை பறிக்கக்கூடிய அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை, ஆட்குறைப்பு நடவடிக்கை ஆகியவைகளைக் கைவிட வேண்டும். அரசுத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: குமரியில் சொந்தக்கட்சியினருக்கே கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி!