ETV Bharat / state

"சிறுவனின் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டி அகற்றம்" - அரசு மருத்துவர்கள் சாதனை

author img

By

Published : Sep 17, 2019, 8:04 PM IST

சென்னை: அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏழு வயது சிறுவனுக்கு தாடையில் இருந்த ஒன்றரை கிலோ கட்டியை அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர் .

அமைச்சர்

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வினோத் - பிரியா தம்பதியின் மகன் எபினேசர்(7). சிறுவனுக்குத் தாடையில் பெரியளவில் கட்டி வளர்ந்து முகத்தின் அழகையே கெடுத்ததுடன், உணவு உண்பதிலும் பிரச்னை ஏற்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, அவரது பெற்றோர்கள் கொண்டு சென்றனர். அங்கு எபினேசருக்கு திசு பரிசோதனை செய்தபோது, 'பெமிலியல் ஜய்ஜான்டிபார்ம் சிமெண்டோமா' எனப்படும் மரபுரீதியான வளரக்கூடிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

அறுவை சிகிச்சைக்குபின் சிறுவன் எபினேசர்
அறுவை சிகிச்சைக்குபின் சிறுவன் எபினேசர்

இதனைத்தொடர்ந்து அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எபினேசர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த வாய் முக அறுவை சிகிச்சை துறைத்தலைவர் பிரசாத் , மருத்துவர்கள் பாலாஜி, அருண்குமார் ஆகியோர் கொண்ட குழு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றத் திட்டமிட்டனர்.

கட்டியுடன் சிறுவன் எபினேசர்
கட்டியுடன் சிறுவன் எபினேசர்
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி இந்தக் குழுவினர் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து எபினேசர் தாடையில் இருந்த 1 கிலோ 500 கிராம் எடையுள்ள தசை கட்டியை அகற்றினர். மேலும் அவருக்கு பசி கட்டியுடன் வாய் கீழ் தாடையில் இருந்த எலும்பும் அகற்றப்பட்டு,பிளேட் வைத்துள்ளனர். தற்பொழுது அவர் நலமுடன் உள்ளார்.
கட்டி அகற்றப்பட்ட சிறுவன்

இந்நிலையில் ஏழு வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 'சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த எபினேசர் என்ற சிறுவனுக்கு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவர் குழுவினர் சிறப்பாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மரபு வழியில் இந்தக் கட்டி உலகில் 55 நபர்களுக்கு கண்டறியப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட இந்த வகையான கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

சிறுவனுக்கான சிகிச்சை மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அகற்றப்பட்டது . இவரின் பாட்டி இதுபோன்ற கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது உயிரிழந்ததாகத் தெரிகிறது . இவரின் பெரியம்மாவுக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இவரின் பாட்டி இறந்ததால் அறுவைசிகிச்சை செய்து கொள்ளாமல் காலம் கழித்து வந்துள்ளனர் . பின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்த உடன் மருத்துவர்கள் அவருக்கு சிறப்பாக சிகிச்சை செய்து முடித்துள்ளனர் என தெரிவித்தார் .

இதையும் படிங்க: ராசாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை - குவியும் பாராட்டு!

Intro:அரசு பல் மருத்துவக் கல்லூரியில்
வாய் தாடையில் 1 .5கிலோ கட்டி அகற்றம்

Body:அரசு பல் மருத்துவக் கல்லூரியில்
வாய் தாடையில் 1 .5கிலோ கட்டி அகற்றம்

சென்னை,

சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் ஏழு வயது சிறுவனுக்கு தாடையில் இருந்த ஒன்றரை கிலோ கட்டியை அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர் .

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வினோத், பிரியா ஆகியோரின் மகன் எபினேசர். ஏழு வயதில் எபினேசர் கடையில் பெரிய அளவில் கட்டி வளர்ந்து முகத்தின் அழகையே கெடுத்ததுடன், உணவு உண்பதிலும் பிரச்சினை ஏற்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சிறிய அளவில் தொடங்கிய கட்டி மிகவும் வேகமாக வளர்ந்து பின்னர் முகத்தையும் தாண்டி, கழுத்து மற்றும் தொண்டையை அழுத்தியதால் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு எபினேசர் இருக்கு திசு பரிசோதனை செய்தபோது, பெமிலியல் ஜய்ஜான்டிபார்ம் சிமெண்டோமா எனப்படும் மரபுரீதியான வளரக்கூடிய கட்டி என்பதை கண்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக எபினேசர் அனுப்பப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த வாய் முக அறுவை சிகிச்சை துறைத்தலைவர் பிரசாத், மருத்துவர்கள் பாலாஜி ,அருண்குமார் ஆகியோர் கொண்ட குழு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற திட்டமிட்டது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இந்த குழுவினர் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து எபினேசர் தாடையில் இருந்த 1 கிலோ 500 கிராம் எடையுள்ள தசை கட்டியை அகற்றினர். மேலும் அவருக்கு பசி கட்டியுடன் வாய் கீழ் தாடையில் இருந்த எலும்பும் அகற்றப்பட்டு,பிளேட் வைத்துள்ளனர். தற்பொழுது அவர் நலமுடன் உள்ளார்.

ஏழு வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், திருவொற்றியூரை சேர்ந்த எபினேசர் என்ற மாணவனுக்கு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவர் குழுவினர் சிறப்பாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மரபு வழியில் இந்தக் கட்டி உலகில் 55 நபர்களுக்கு கண்டறியப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட இந்த வகையான கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அகற்றப்பட்டது . இவரின் பாட்டி இதுபோன்ற கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது இறந்து விட்டார் . இவரின் பெரியம்மா மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இவரின் பாட்டி இருந்ததால் அறுவைசிகிச்சை செய்து கொள்ளாமல் காலம் கழித்து வந்துள்ளனர் . பின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்த உடன் மருத்துவர்கள் அவருக்கு சிறப்பாக சிகிச்சை செய்து முடித்துள்ளனர் என தெரிவித்தார் .

மேலும் கிங்ஸ் மருத்துவக் கல்லூரியில் கிளை தமிழகத்தில் தொடங்கும்போது இங்கு உள்ளவர்களுக்கும் தரமான சிகிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.