அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு நிர்வாகி பாலகிருஷ்ணன் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியத்துடன் ஒப்பிடுகையில், மிக குறைவாக எங்களின் ஊதியம் உள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வராவிட்டால், ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். ஏற்கனவே அரசுப் பணியில் இருந்த மருத்துவர்கள் 12க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் காப்பீடுத்திட்டப் பணிகளை புறக்கணிப்போம். என்று அவர் தெரிவித்தார்.