சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத் தொடரில் இன்று கேள்வி நேரத்தின் போது, கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம், தனது தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அரசு ஆவணம் செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வழக்கம் போல் பேச ஆரம்பித்தார்.
நான் பலமுறை பதில் கூறிவிட்டேன் , கோவையில் ஏற்கெனவே உள்ள அரசு கலை கல்லூரிகள் , சுயநிதி மற்றும் தனியார் கலை கல்லூரிகள் மாணவர்களின் கல்வியை பூர்த்தி செய்வதால் புதிதாக கல்லூரிகள் தொடங்க தேவை இல்லை என தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்ட கலை கல்லூரிகளில் இருக்கும் 59 ஆயிரத்து 500 இடங்களில் சுமார் 23 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது எனவும் சிங்காநல்லூரில் உள்ள கல்லூரிகளில் இருக்கும் 7 ஆயிரத்து 333 இடங்களில் 3 ஆயிரத்து 11 இடங்கள் காலியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமன் சிங்காநல்லூரில் 2 அரசு உதவி பெரும் கல்லூரிகள் மட்டுமே உள்ளது , தனியார் கல்லூரிகளில் தான் அதிக காலி இடங்கள் இருப்பதால் ஏழை மாணவர்களுக்கென தனது தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என பேசினார். இறுதியில் அமைச்சர் பொன்முடி , அரசு கல்லூரிகள் இல்லாத இடத்திற்கே முன்னூரிமை வழங்கப்படும் , வருங்காலத்தில் தேவைப்பட்டால் சிங்காநல்லூரில் அரசு கலை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு தனியாக விளையாட்டு மைதானம் கேட்ட ஓபிஎஸ்