ETV Bharat / state

'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை; இன்று இரவு எங்கெங்கு பஸ் இயங்காது தெரியுமா? - புயல்

'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு, அரசுப் பேருந்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்தான விரிவான தகவலைக் கீழே காண்போம்.

இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது
இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது
author img

By

Published : Dec 8, 2022, 7:12 PM IST

சென்னை: நேற்று (டிச.7) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து, தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே 09.12.2022அன்று நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 வரை 4 நாட்களுக்கு, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “மாண்டஸ்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் “மாண்டஸ் புயல்” எதிரொலியாக அனைத்து அதிகாரிகளும் மாவட்டத் தலைநகரங்களில் இருக்க வேண்டும். புயலின் தாக்கம் அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இரவு நேரப் பேருந்து இயக்கக் கூடாது. பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது, மாவட்ட நிர்வாகத்துடன் துறைசார்ந்த இயக்குநர்கள் அவ்வப்போது தகவலை கேட்டு அறிய வேண்டும்” என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.