சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் புயலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களில், நேற்று (நவம்பர் 25) மதியம் 1 மணி முதல் பேருந்து சேவையை நிறுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று நள்ளிரவு நிவர் புயல் மரக்காணம் - புதுச்சேரி இடையே முழுவதுமாக கடையை கடந்தது. இந்நிலையில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட மாவட்டங்களில், இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் பேருந்து சேவையை தொடங்கலாம் என அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அம்மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.
இதையும் படிங்க : Nivar Cyclone Live Updates: நிவர் புயலின் தாக்கம் குறித்த உடனடி தகவல்கள்