சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் (Government arts and science colleges) உதவிப் பேராசிரியர்களாகப் (associate professors) பணியாற்றிவந்த 37 பேர் பதவி உயர்வுபெற்று பல்வேறு கல்லூரி முதல்வர்களாக நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் உதவிப் பேராசிரியர்கள் 37 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, முதல்வர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வராக வாசுதேவன், அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக கலைச்செல்வி, ஆலங்குளம் கல்லூரிக்கு பாத்திமா, ஓசூர்- ஸ்ரீதரன், கூடலூர் - ராஜேந்திரன், ராமேஸ்வரம் அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரவிந்திரன் உள்பட 37 பேர் முதல்வர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Pongal 2022: தைப்பொங்கல் சிறப்புத் தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு