ETV Bharat / state

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நாளை முதல் விடுமுறை! - government announces long holiday for Universities and colleges

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

holiday for Universities and colleges
holiday for Universities and colleges
author img

By

Published : Dec 20, 2019, 2:54 PM IST

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்கள் மத்திய , மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தால் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பருவத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு
விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் 27, 30 ஆகிய 2 நாட்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு நடைபெறுகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கும், 25ஆம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டை மாணவர்கள் கொண்டாடுவதற்கும் இந்த விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே வரும் 23, 24, 26, 31 ஆகிய 4 நாட்கள் விடுமுறை ஆகும். தற்பொழுது கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும் 4 நாட்களுக்கு சனிக்கிழமை அல்லது வேறு விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளனர். விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய அறிவுரை!

Intro:தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் விடுமுறை Body:

தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் விடுமுறை

சென்னை,

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் வரும் 30 ந் தேதி விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தினம் தினம் வலுவடைந்து வருகிறது. இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் மத்திய , மாநில அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். மாணவர்கள் மத்தியில் போராட்டம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரியிலும் போராட்டம் நடைப்பெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தால் ஜனவரி 2 ந் தேதி வரை விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பருவத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், கல்லூரி கல்வி இயக்குனர், அனைத்து பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் வரும் 27,30 ஆகிய 2 நாட்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கும், 25 ந் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவை மாணவர்கள் கொண்டாடுவதற்கும், புத்தாண்டை மாணவர்கள் கொண்டாடுவதற்கும் வரும் 1 ந் தேதி அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து கல்லூரிகளும் 23 ந் தேதி முதல் ஜனவரி 1 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே வரும் 23,24,26,31 ஆகிய 4 நாட்கள் விடுமுறை ஆகும். தற்பொழுது கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும் 4 நாட்களுக்கு சனிக்கிழமை அல்லது வேறு விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தலாம் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.