ETV Bharat / state

சென்னையில் சலூனில் நுழைந்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி! - சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு

சென்னையில் பட்டப்பகலில் சலூனில் புகுந்து கத்தி முனையில் வழிப்பறி செய்த கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் பட்டப்பகலில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி

author img

By

Published : Dec 9, 2022, 9:29 AM IST

சென்னை: நொளம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி. நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சலூன் (Guys and Dolls) செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் வாடிக்கையாளர்கள் போல் சலூன் கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடையில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்கள் உட்பட 7 பேரை பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் கத்திமுனையில் அவர்களிடம் இருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 8 விலை உயர்ந்த செல்போன்கள், பெண் ஊழியர்கள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்க நகைகள் மற்றும் கடையில் இருந்த 7500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு முகத்தை மூடியபடி அங்கிருந்து தப்பியோடினர்.

முடித்திருத்தம் செய்யவேண்டும் எனக் கூறி வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்த கும்பல் தொடர்பாக கடை உரிமையாளர் அளித்தப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், நொளம்பூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சென்னையில் சலூனில் நுழைந்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி!

அப்போது வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அதனடிப்படையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: கார்பன் அளவைக் குறைப்பதற்கு சென்னை ஐஐடியில் இந்திய- ஆஸ்திரேலிய மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.