ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் தடுப்பை உடைத்து சாலையில் ஏறிய சரக்கு ரயில்! - news in tamil

Kanchipuram Goods train accident: காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்திலுள்ள சரக்கு முனையத்தில், கர்நாடகாவிலிருந்து இரும்பு தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலானது எதிர்பாராத விதமாக தண்டாவாளத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் தடுப்பை உடைத்து சாலையில் ஏறிய சரக்கு ரயில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 7:10 AM IST

காஞ்சிபுரத்தில் தடுப்பை உடைத்து சாலையில் ஏறிய சரக்கு ரயில்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வையாவூா் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று (அக்.3) சரக்கு ரயில் தடம் புரண்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் இருவரும், ரயில் கார்டும் உயிர் தப்பினர். காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ள நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் ஆலைகளுக்கு அனுப்பப்படும்.

அந்த வகையில், காஞ்சிபுரம் - வையாவூர் செல்லும் சாலையில் பழைய ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு முனையத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அவ்வப்பொழுது வரும் சரக்கு ரயில் முனையத்திற்கு வந்து நிற்கும். அப்போது சரக்கு ரயில்களிலிருந்து சரக்குகள் லாரிகள் மூலம் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும்.

இந்நிலையில், நேற்று (அக் 3) கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து இரும்பு தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலானது, எதிர்பாராத விதமாக வாக்கி டாக்கி சிக்னல் கோளாறு காரணமாக ரயில் ஓட்டுநர் சரக்கு ரயிலை நிறுத்த முற்ப்பட்டபோது, சரக்கு முனையத்திலுள்ள தண்டவாளத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியேறி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: மெஷின்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை 50 சதவீதம் உயர்வு - தெற்கு ரயில்வே தகவல்

இவ்விபத்தில் அப்போது சாலையை கடந்து சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களும் ரயில் பெட்டிக்கடியில் மாட்டிக்கொண்டு முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், இவ்விபத்து நேரும்போது இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தை விட்டு வெளியேறி சாலையில் குதித்ததால் உயிர் தப்பினர்.

தண்டவாளத்தின் தடுப்பை மீறி சுமார் 20 அடி அளவில் சரக்கு ரயிலானது வெளியேறியுள்ளது. மேலும், இவ்விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் போலீசார், பொதுமக்கள் யாரும் உள்ளே வராமல் இருக்க இப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்தும், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ரெடியான வேலூர் விமான நிலையம்..! இந்த ஆண்டிற்குள் விமான சேவை துவக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.