சென்னை: இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவிலிருந்து, ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையைச்சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 37) இலங்கையைச்சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 29)ஆகிய இருவரும் இந்த விமானத்தில் வந்தனர். இருவரையும் அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பாா்சல்களை எடுத்து சோதனையிட்டனா். அப்போது ரூ.57.5 லட்சம் மதிப்புடைய 1.24 கிலோ தங்கப்பசை இருந்ததை கைப்பற்றினா். அத்தோடு இருவரையும் கைது செய்தனர்.
அதைப்போல் மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏா்ஏசியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். சென்னையைச்சேர்ந்த சையது அலி முகமது (வயது34) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது தங்கப்பசை பாா்சல் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனா். ரூ.49 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 60 கிராம் தங்கப்பசையைக் கைப்பற்றினா். மேலும், அவரது உடைமையில் இருந்து, ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 20 செல்போன்களையும் பறிமுதல் செய்தனா். அதோடு பயணியைக் கைது செய்தனா்.
மேலும் பஹ்ரைன் நாட்டிலிருந்து கல்ப் ஏா்வேஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையைச் சோ்ந்த ஜலாலுல்லா சுல்தான் (வயது 23) என்பவரிடம் இருந்து, ரூ.15.05 லட்சம் ரூபாய் மதிப்பிலான 237 கிராம் தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்து, பயணியைக் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.
சென்னை விமான நிலையத்திற்கு பல நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புடைய 2.62 கிலோ தங்கம், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை, சென்னையைச் சோ்ந்த 5 பயணிகள் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் பேக்கரி ஒன்றில் ரூ.70,000 கொள்ளை